undefined

இன்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்... 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தும் ஜாக்டோ-ஜியோ!

 

இன்று தமிழகம் முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்ற நிலையில், இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது” என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே ஜாக்டோ ஜியோ அமைப்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றன. அப்போது ஜாக்டோ ஜியோ போராடத்திற்கு நேரில் சென்று இன்றைய தமிழக முதல்வரும், அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆதரவு தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், தான் ஆட்சிக்கு வந்தால், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகாலம் முடிவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கிறது. இப்போது வரையில் பொறுமையாகவும், அவ்வப்போது தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், தேர்தல் வாக்குறுதி காப்பாற்றப்படும் என்கிற எதிர்பார்ப்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து பாராமுகம் காட்டி வரும் திமுக அரசு, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எந்த வகையான சம்பளமும் பெற முடியாது என்றும், மருத்துவ விடுப்பு தவிர்த்து சாதாரண விடுப்போ, தனிப்பட்ட விடுப்போ, ஏதேனும் பிற விடுப்போ நாளை அனுமதிக்கப்படக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. 

மேலும் இன்று காலை 10.15 மணிக்குள் பணியிடங்களில் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களைத் துறைத் தலைவர்கள் உடனடியாகச் சேகரித்து மனிதவள மேலாண்மைத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இன்றைய போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டால், இன்று தமிழகம் முழுவதும் பல துறைகளின் பணிச்செயல்பாடுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!