வைரல் வீடியோ... பரபரப்பான  சாலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஓடும் 2 குதிரைகள்!

 

மத்திய லண்டனில் உள்ள ஆல்ட்விச் பகுதியில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. எப்போதும் வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலை இது.. இந்நிலையில் திடீரென நடுரோட்டில் 2 குதிரைகள் ஓடியது..  ஒன்று வெள்ளை குதிரை, மற்றொன்று கருப்பு குதிரை.. இரண்டு குதிரைகளின் உடலிலிருந்தும் ரத்தம் வழிந்தது..  ரத்தம் சொட்ட சொட்ட இந்த காட்சி வீடியோவாகவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

<a href=https://youtube.com/embed/BC7iIs8bqOg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BC7iIs8bqOg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Terrified driver films as two horses, one covered in blood, run through Central London" width="315">

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. சாலையில் வேகமாக ஓடும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி குதிரை காயம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பகல்நேர பயிற்சியின் போது 5 குதிரைகள் தப்பியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, அதில் 2 குதிரைகள் தற்போது பிடிபட்டுள்ளதாக லண்டன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

"சாலையில் பல குதிரைகள் ஓடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ராணுவத்தின் உதவியுடன் அவற்றைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று லண்டன் போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்த 2 குதிரைகளை மீட்டு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல உள்ளனர்.

 இதனிடையே குதிரைகள் மீது ஏராளமான வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒருவர் பேருந்து மீது குதிரை மோதியதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மத்திய லண்டனில் உள்ள பரபரப்பான சாலையின் நடுவே கடிவாளங்களை பூட்டப்பட்ட 2 குதிரைகள் ஓடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!