பெரும் சோகம்... தொடர் கனமழையால் யாத்திரை சென்ற 10 பேர் பலி!
ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால், மணிமகேஷ் யாத்திரை சென்ற 10 பக்தர்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சம்பா மாவட்டத்தில் மணிமகேஷ் புனித யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
சம்பா மற்றும் பதான்கோட் இடையிலான நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பா - பார்மோர் பாதையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஹிமாசலப் பிரதேசத்தில் தற்போது வரை கனமழை சார்ந்த சம்பவங்களினால் 164 பேர் பலியாகி இருப்பதுடன் 40 பேர் மாயமாகியுள்ளனர். மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டு பலியான பக்தர்களில் பெரும்பாலானோர் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!