undefined

பெரும் அதிர்ச்சி.. பாதி எரிந்த நிலையில் கிடந்த சிறுமி சடலம்.. தீவிர விசாரணையில் போலீசார்!

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி, பழனியில் உள்ள நவீன எரிவாயு தகன மையத்தில் தகனம் செய்யும் பழக்கம் இருந்தால் மட்டுமே தகனம் செய்ய முடியும். இந்நிலையில், நேற்று மாலை ஆடு மேய்க்க சென்றவர்கள், சுடுகாடு பகுதியில் தலையில்லாத உடல் பாகம் எரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் தலையில்லாத எலும்புக்கூட்டை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோரிக்கடவு பகுதியில் நேற்றுமுன்தினம் கூட யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், போலிசாருக்கு கிடைத்த எரிந்த எலும்புக்கூடு சிறுமியுடையதாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோரிக்காடு சுடுகாட்டில் தலையில்லாத உடல் பாகத்தை மர்ம நபர்கள் வேறு பகுதியில் இருந்து கொன்றுவிட்டு தீ வைத்து எரித்தார்களா? என கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர். பழனி அருகே தலையில்லா எலும்புக்கூடு எரிந்த நிலையில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!