குஷியில் மாணவர்கள்... இன்று முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!
ஏப்ரல் 8ம் தேதி வரை சில பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றன. இதனையடுத்து ரம்ஜான், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி, மக்களவைத் தேர்தல் என தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன், 3 அல்லது 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரம், தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!