55 வயசாகுது... கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது!
கல்லூரி மாணவி ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 55 வயதான மோகன் குமார் எனும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரைப் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இ து நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.ஆக மோகன் குமார் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ மோகன் குமார் மீது கல்லூரி மாணவி ஒருவர், தன்னை மோகன் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ மோகன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக மோகன் குமாரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!