undefined

 சிகரம் தொட்ட தலைவர்... பஞ்சாயத்து தலைவராக இருந்து முதல்வராக உயர்ந்தவர்! 

 
 

ஒடிசாவின் புதிய முதல்வராக  மோகன் சரண் மாஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் கியோஞ்சர் சதார் பகுதியில்  பிறந்து வளர்ந்தவர். 1997 முதல் 2000  வரை கிராம தலைவராக இருந்து பின்னர்  பாஜக சார்பில்  எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
2019 ம் ஆண்டு எம்எல்ஏவாக  வெற்றி பெற்ற பிறகும் சட்டசபையில் அவர் பேசியது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இவர் இந்த தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று கடைசியாக 2024 ம்  ஆண்டு   முதல்வர் பதவியை அடைந்துள்ளார். சிகரம் தொட்ட இவரது வெற்றிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற அதே நேரத்தில் சில மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 147 இடங்களில்  பாஜக் முதன்முறையாக 78 இடங்களை கைப்பற்றி  தனி பெருபான்மையுடன்  ஆட்சியை பிடித்துள்ளது.  இங்கு  மத்திய அமைச்சர்களின் கூட்டம் நேற்று ஜூன் 11ம் தேதி நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் ஒடிசாவின்  முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இவர் கியோஞ்சர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வான சரண் மாஜீ பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்.  இவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒடிசாவில் 15-வது முதல்வராக தேர்வாகி இருக்கிறார். இவரை தொடர்ந்து கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா இருவரும் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!