மார்பு, வயிறு என 12 முறை கத்திக்குத்து... மனைவி இறந்ததாக ஸ்டேட்டஸ் போட்டு விட்டு கொலை செய்த கணவன்!
மூனு நாட்களுக்கு முன்பே மனைவி இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து, இரங்கல் தெரிவித்து விட்டு மனைவியை கொலை செய்த கணவனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் ரத்தோட் (35). இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்து வந்த நிலையில், 'இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது' என கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வித்யா சென்று விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த விஜய் ரத்தோட், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் மனைவி புகைப்படத்தை வெளியிட்டு, அவர் இறந்துவிட்டதாக இரங்கல் செய்தியை பதிவிட்டார். இது அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று விஜய் ரத்தோட் மனைவியை தேடி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. என் புகைப்படத்தை வெளியிட்டு எப்படி இரங்கல் தெரிவிக்கலாம் என கூறி வித்யா கணவரிடம் சண்டை போட்டார்.
தகராறு முற்றவே விஜய் ரத்தோட் தான் கொண்டு சென்ற கத்தியால் மனைவி வித்யாவை சரமாரியாக குத்தினார். 12 தடவை அவர் குத்தியதில் வித்யாவின் மார்பு, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வித்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விஜய் ரத்தோட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!