நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... 36,000 அடி உயரத்தில் பறந்து சட்டென கீழே சரிந்த விமானம்... !
ஜப்பான் எயர்லைன்ஸின் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் 26,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் காற்றழுத்தக் கோளாறு காரணமாக ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்து உயிரைக் காப்பாற்ற நினைத்த நொடியொன்றில் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜப்பானின் நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் விமானத்தின் காற்றழுத்த அமைப்பில் ஏற்பட்ட கோளாறு அவசரநிலை அலாரம் அடித்தது. நொடியிலே ஆக்ஸிஜன் முகமூடிகள் கீழே விழ, பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். “ஒரு மௌனமான வெடிச் சத்தம் கேட்டது. அதற்குப் பிறகு ஆக்ஸிஜன் மாஸ்க் விழுந்தது. விமான சேவகி அழுகையுடன் ‘விமானத்தில் கோளாறு! முகமூடியை அணியுங்கள்!’ என எச்சரிக்கை விடுத்தார்,” என ஒருவர் தெரிவித்தார்.
மற்றொருவர் “பயணிகள் சிலர் இறுதி கட்டத்திற்கு சென்றுவிட்டோம் என நினைத்து, ‘குட்பை லெட்டர்கள்’, வில்கள், சொத்துத் தகவல்களை எழுதி வைத்தனர்” எனக் கூறினார். இந்த திடீர் காற்றழுத்த மாற்றம், பலருக்கு மூச்சுத் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஒவ்வொரு பயணிக்கும் ¥15,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,500) நிவாரணம் மற்றும் தங்கும் வசதிகளை வழங்கியுள்ளது. இந்த இயந்திரக் கோளாறு குறித்து தற்போது முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!