நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... கடலில் விழுந்த விமானம்... துடிதுடித்து பலியாகும் உயிர்கள்!
ஆஸ்திரேலிய தீவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கிருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. இந்த விமான விபத்தில் சுவிஸ் மற்றும் டேனிஷ் சுற்றுலா பயணிகள் உட்பட 3 பேர் பலியாகினர், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். செஸ்னா 208 கேரவனில் இருந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் ரோட்னெஸ்ட் தீவில் விபத்தின் பின்னர் காயமின்றி மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 65 வயது பெண், டென்மார்க்கை சேர்ந்த 60 வயது ஆண் மற்றும் பெர்த்தை சேர்ந்த 34 வயது ஆண் விமானி என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மூவரும் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான விமானம் கடலில் மிதக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!