undefined

இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவமபர் 16ம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!