தமிழகத்தில் நவ.12 வரை 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

 

தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், வரும் நாட்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இன்று நவம்பர் 8ம் தேதி இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாளை நவம்பர் 9ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக நவம்பர் 12ம் தேதி வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பதிவாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 13ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் மழை வலுவாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.

கடலோர மாவட்டங்களில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்கும்படியும், ஆறுகள், வாய்க்கால்கள் அருகே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வானிலை மாற்றங்களை தொடர்ந்து கவனிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க