ரத்தன் டாடாவின் புகழ்பெற்ற மேற்கோள்கள் சில... | இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்
ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும், உந்து சக்தியாகவும் விளங்கியவர் டாடா. அவரது புகழ்பெற்ற மேற்கோள்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.
"சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுக்கிறேன், பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்."
"பல விஷயங்கள் உள்ளன, நான் மீண்டும் வாழ வேண்டும் என்றால், நான் அதை வேறு வழியில் செய்வேன். ஆனால் என்னால் செய்ய முடியாமல் போனதைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை."
"மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து ஒரு நினைவுச்சின்னம் கட்ட அவற்றைப் பயன்படுத்துங்கள்."
"வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடக்கவும். ஆனால் வெகுதூரம் நடக்க விரும்பினால் ஒன்றாக நடக்கவும்"
“வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்து அப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் அது தற்காலிமானதாகத்தான் இருக்கும். மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது.’’
“ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள் தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதே போல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள் தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.”
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!