வரலாற்று சாதனை... செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழையும் முதல் இந்திய வீராங்கனை!
சதுரங்க விளையாட்டின் உலகக் கோப்பைப் போட்டிக்குள் நுழையும் முதல் இந்திய வீராங்கனையாக வரலாற்று சாதனைப் படைத்துள்ளார் இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக். 2025 FIDE மகளிர் உலகக் கோப்பை தொடர் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், எலைட் செஸ் தொடரில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
19 வயதான திவ்யா, முதல் ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் டிரா செய்த நிலையில், 2 வது ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், FIDE மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையாக வரலாறு படைத்துள்ளார்.
மேலும், இந்த வெற்றி அவருக்கு 2026 மகளிர் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறவும், முதல் கிராண்ட்மாஸ்டர் நார்ம் பெறவும் உதவியுள்ளது. திவ்யாவின் இந்த சாதனை இந்திய பெண்கள் செஸ்ஸில் ஒரு மைல்கல் தருணமாக பார்க்கப்படுகிறது.
இறுதிப் போட்டியில், இந்தியாவின் கொனேரு ஹம்பி மற்றும் சீனாவின் லேய் டிங்ஜியே இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவரை எதிர்கொள்வார். இந்த தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. 2 இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!