உங்களுக்கு எத்தனை வங்கிகளில் கணக்கு இருக்கிறது... இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க... இல்லைன்னா உங்க பணத்துக்கு ஆபத்து!

 

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத நபரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயம், பிறந்த குழந்தை முதல்  விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அனைவரிடமும் வங்கி கணக்கு இருக்கிறது. இதில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்போம். குறிப்பாக, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள். எந்த நிறுவனத்தில் பணிக்கு  சேர்ந்தாலும் அந்நிறுவனம் குறிப்பிட்ட வங்கியில் உடனே வங்கி கணக்கை தொடங்க சொல்வதால் வங்கி கணக்கு பல்கி பெருகிவிடுவது வழக்கம் ஆகவே வங்கிகள்  பலவற்றில் கணக்கு நமது பெயரில் சேர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் அதற்கான விதி என்ன என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? பெரும்பாலான மக்கள் மூன்று முதல் நான்கு சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர். சிலர் இதை விட அதிகமான வங்கி கணக்குகளையும் வைத்துள்ளனர். ஏனென்றால், இந்தியாவில் வங்கிக் கணக்கு திறப்பதற்கு எந்த கட்டுப்பாடோ வரையரையோ இல்லை. வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. 

ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். அதே சமயம் அதை நிர்வாகிப்பதும் எளிது. உங்கள் கணக்குகளில் இருந்து சரியான பரிவர்த்தனைகளை தொடர்ந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. நீண்ட காலமாக உங்கள் வங்கி கணக்கை நீங்கள் உபயோகிக்காமல் இருந்தால், வங்கி உங்கள் கணக்கை முடக்கலாம். எனவே, தான் உங்கள் எல்லா கணக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பல வங்கிக் கணக்குகளைத் திறக்கும் போது ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியதை தவறவிட்டுவிடுகிறோம்.

அனைத்து வங்கிகளும் சம்பளக்கணக்கைத் தவிர சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கியுள்ளன. அதாவது, உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும். இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும். அந்த கட்டணம் கழித்த பிறகும் நீங்கள் குறைந்தபட்ச கணக்கை பராமரிக்கவில்லை என்றால்.. உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுவிடும். 

இச்சூழலில் நீங்கள் குறைந்தபட்ச இருப்பு பற்றி கவனமாக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கை எப்படி சரியாக நிர்வகிக்கலாம். அதிக கணக்குகள் மூலம் வங்கிகள் பல நன்மைகளைப் பெறுகின்றன. ஒவ்வொரு வங்கியும் அவ்வப்பொழுது குறுச்செய்திகளை அனுப்புவதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன. வங்கிக் கணக்கை பராமரிப்பதற்கான செலவையும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதே போல ஆண்டாண்டுக்கு டெபிட் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்குத் தேவையான வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருப்பதோடு உங்களுக்கு தேவையில்லாத செலவுகளும் ஏற்படுவதை தவிர்க்கலாம் மேலும் வருமான வரித்துறைக்கு உங்கள் வரிக்கணக்கை சமர்ப்பிக்கும் பொழுது எவ்வித சிக்கலும் இருக்காது குழந்தை மட்டுமல்ல இரண்டு சேமிப்புக்கணக்கே ஒருவருக்கு போதுமானது என்பதை கவனத்தில் கொள்ளவும் அது உங்கள் சேமிப்பையும் பலப்படுத்த உதவும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!