உங்க நட்சத்திரத்திற்கு விநாயகரை எப்படி வழிபட்டால் முழு பலன்கள் கிடைக்கும்?! | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

 

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள நிலையில் எப்படி வழிபட வேண்டும் என தெரிஞ்சுக்கோங்க. விநாயகரை எப்படி வழிபட்டாலும், அதாவது எந்த உருவத்தில் செய்து வழிபட்டாலும், நீங்கள் எந்த வேலைச் செய்துக் கொண்டே வழிபட்டாலும், எப்போது வழிபட்டாலும் பலன்கள் உண்டு.

தூங்கும் போது கூட கணேசா, பிள்ளையாரப்பா, விநாயகரா என்று அசதியில் சொன்னாலும் அதற்கான பலன்கள் உண்டு. அதே சமயம் உங்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ப விநாயகரை எப்படி வழிபாட வேண்டும் என்றும், எப்படி வழிபட்டால் முழுமையான பலன்களைப் பெறலாம் என்றும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்க. இப்படி நட்சத்திரத்திற்கேற்ப வழிபடும் போது பலன்கள் அதிகரிக்கும். 

1.மேஷம், கடகம், துலாம், மகரம்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப் பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க, பிற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் தேங்காய் உடைத்து செவ்வரளிப் பூக்கள் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.


2. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் 

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய்  உடைத்து, வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தியா காலத்தில் அதாவது காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய்  உடைத்து, மல்லிகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?