பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன்... முன்னாள் முதல்வருக்கு மகள் கவிதா பதிலடி!
முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ். இவர் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவராவார். இவரது மகளான கவிதா, சமீபமாக கட்சியின் உள்நிலை நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், தொந்தரவு ஏற்படும்படி செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து கட்சி சார்பில் நடவடிக்கை எடுத்து, கவிதாவை சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை நேரடியாக அவரது தந்தை சந்திரசேகர ராவ் பிறப்பித்தார்.இதற்கு எதிர்வினையாக கவிதா பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னை மற்றும் தந்தை, சகோதரரான கே.டி. ராமாராவை சூழ்ச்சிகரமாகச் சிக்கவைக்க சில உறவினர்கள் முயற்சி மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கவிதா அவரது சகோதரர் கே.டி.ராமாராவை நேரடியாக எச்சரித்ததாகவும், ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் குடும்பத்தை அழிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஹரிஷ் ராவ், சந்திரசேகர ராவும், கே.டி. ராமாராவும் தோற்கடிக்க நிதி வழங்கியதாகவும் அவர் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்வுகள், தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!