கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை... கொந்தளித்த பெண்கள்.. தீர்ப்பை மாற்றிய அரசு!

 

அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டு இளம்பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அந்த கொடூரன் பிடியில் இருந்து இளம்பெண் போராடி தப்பித்தார். எனினும் அவர் மீண்டும் நெருங்கியதால், அப்பெண் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக, அந்த நபரை கீழே தள்ளி விட்டதில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதனையடுத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை அந்த நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தன்னை காப்பாற்றவே அப்பெண் தள்ளி விட்டதாகவும், இல்லை கொலை செய்தாலும் தப்பு இல்லை எனவும் பலரும் இளம்பெண்ணுக்கு ஆதரவாக கருத்து கூறி வந்தனர். இது தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அந்நாட்டின் நீதிமன்றம் இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.13 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பெண்ணிய குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். அப்போது, தனது உயிரை காப்பாற்ற தான் பெண் போராடியதாகவும், அவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது எனவும், அவர்கள் வலியுறுத்தினர். 

நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பல்வேறு தரப்பினரும் அந்நாட்டின் அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்றனர். இதனை ஏற்றுக் கொண்ட மெக்சிகோ அரசாங்கம் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!