“பள்ளி மாணவிகள்.. இளம்பெண்கள்... கற்பழிக்கப்பட்ட பெண்களின் சடலங்களை 1998 முதல் புதைத்து வந்தேன்”... கர்நாடகாவை அதிர வைத்த துப்புரவு தொழிலாளி!
கர்நாடகா மாநிலத்தில், 1998ம் ஆண்டு முதல், கற்பழிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட பல பெண்களின் சடலங்களை, சில பாதி எரிந்த நிலையிலும் தான் புதைத்து வந்துள்ளதாகவும், சடலங்களைத் தான் புதைத்த இடங்களைக் காட்ட தயாராக இருப்பதாகவும் தான் மிரட்டப்பட்டதால் உயிர் பயத்தில் இத்தனை வருடங்கள் இதைச் சொல்லாமல் இருந்ததாகவும் துப்புரவு தொழிலாளி ஒருவர் கர்நாடக காவல்துறையினரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பல பெண்களின் உடல்களைப் புதைக்கச் சொல்லி தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசாரிடம் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். முதல் குற்றச் சம்பவங்கள் 25 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும், 1998 மற்றும் 2014ம் வருடங்களுக்கும் இடையில் இளம்பெண்களின் உடல்களை எரித்து புதைக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மறுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
தர்மஸ்தலத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பல பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளும் இதில் அடங்குவர் என்று அதிர வைத்திருக்கிறார். பள்ளி மாணவியின் சடலம் பள்ளி சீருடையில், புத்தக பையுடன் வந்தது என்றும், கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் உடலில் இருந்தது என்றும் அதிர வைத்திருக்கிறார்.
இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கும் காவல் கண்காணிப்பாளருக்கும் அளித்த புகாரில், குற்றங்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறி இருக்கிறார் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தில் முன்னாள் துப்புரவு ஊழியராகப் பணியாற்றிய அந்த நபர், சிறுமிகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார். அவரின் அடையாளத்தைப் பாதுகாப்பதாக காவல்துறை உறுதியளிக்கிறது.
நீதிமன்றத்திடம் தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 211(a) (சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறை மற்றும் நேரத்தில் தேவையான தகவல்களை வழங்கத் தவறியது) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஒத்துழைப்புக்கு ஈடாக, தனது அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அதிகாரிகளிடம் அவர் கோரியதால், அவரைப் பற்றிய எந்த தனிப்பட்ட தகவலும் வெளியிடப்படாது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சட்ட நடவடிக்கைகளும், விசாரணைகளும் நடந்து வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!