ஒரு போதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்... ஸ்டாலின் ஆவேசம்!
செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் எனப் பதிவிட்டுள்ளார்.
நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன்.
எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் நெசவாளர்கள் -தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!