இளம்பெண்ணை பூஜைக்கு அழைத்து போலி சாமியார் நடத்திய லீலை!
தமிழகத்தைச் சேர்ந்த 58 வயது நபர் ஒருவர், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள வாராங்கல் ஏணுமாமுலா சந்தை பகுதியில் வசித்து வந்துள்ளார். தன்னை சாமியார் எனவும், தன்னிடம் அற்புத சக்தி உள்ளதாகக் கூறிவந்துள்ளார். மேலும் சூனியம் உள்ளிட்ட மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் நோய் தாக்குதல், பிள்ளைகளின் எதிர்காலம், திருமணம் என பல்வேறு விவகாரங்களுக்காக அப்பகுதி மக்கள் இந்த சாமியாரை நம்பி செல்லத் தொடங்கினர். தங்களின் குறைகளைத் தீர்க்க வரும் பெண்களைத் தனிமையில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அழைத்துச்செல்வது இவரது வழக்கமாம்.
ஆனால் தற்போது தான் இந்த சாமியாரின் லீலைகள் அம்பலமாகி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. தனது குடும்பப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனக் கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் சாமியாரிடம் சென்றுள்ளார். அப்போது சில பூஜை செய்ய வேண்டும், அதன் பின்னர் உன் குடும்பத்தில் பிரச்சினை இருக்காது என சாமியார் கூறினார்.
இதனை நம்பிய அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு சில மாந்திரீக வார்த்தைகளைக் கூறி அந்த சாமியார் பூஜை செய்து உள்ளார். அப்போது சாமியார் அந்த பெண்ணை அருகில் அழைத்து, திடீரென பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியே ஓடிச் சென்று விட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பிறகே சாமியாரின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தது.
பின்னர் சாமியாரின் இருப்பிடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சோதனை நடத்தினர். அந்த இடத்தில் பல்வேறு மாந்திரீக புத்தகங்கள், ஆயுர்வேத பொருட்கள், எலுமிச்சை பழங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர் பெண்களை ஏமாற்றி வந்த போலிச் சாமியாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த போலிச் சாமியார் இது போல எத்தனை பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவாகரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்