உயர்நீதிமன்றத்துக்கு போன ஐ.ஏ.எஸ் அதிகாரி.. தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி பிரமோத் குமார் மனு! 

 

பதவி உயர்வு கோரி ஐ.பி.எஸ் அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உயர்ந்தீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் 870 கோடி ரூபாய் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவனத்தின் இயக்குநரை கடத்தி பணம் பறித்ததாக அப்போது மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரமோத் குமார், 2012ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பதை எதிர்த்து பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது, அவரை மீண்டும் பணியமர்த்தும்படி 2016ம் ஆண்டு உத்தரவிட்டது.

தற்போது சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு ஐ.ஜி.யாக பதவியில் இருக்கும் பிரமோத் குமார், தற்பொழுது உயர்நீதி மன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு தற்பொழுது டிஜிபி பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளதோடு, அதற்கு உடனடியாக தமிழக அரசு ஆணையை அனுப்ப வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி மஞ்சுளா அமர்வு, ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமாரின் மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்