சும்மா இருந்தால் பரிசு.. வியக்க வைக்கும் விநோத போட்டி.. சுவாரஸ்ய பின்னணி!
நடிகர் வடிவேலு நடிக்கும் படம் ஒன்றில் வேலை இல்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருக்கும். இதேபோல் தென்கொரியாவில் அரசு சார்பில் சும்மா அமர்ந்திருக்கும் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாட்டின் ஒலிம்பிக் வீரர் மற்றும் பிரபல யூடியூபர் உட்பட 117 போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
சரியாக 90 நிமிடங்கள் செல்போனைப் பார்க்காமல், யாரிடமும் பேசாமல் கண்களைத் திறந்து சும்மா அமர்ந்திருக்க வேண்டும். அவர்களின் இதயத்துடிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பின்னர் 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதயத்துடிப்பு அதிகமாக உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
வேகமான நகர வாழ்க்கை முறையிலிருந்து விடுபட இந்த போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். இதனை அந்நாட்டு மக்களுளும் பார்த்து மகிழ்ந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!