undefined

  இளையராஜா பாடல்கள் மீது உரிமை கோர முடியாது... வழக்கில் திடீர் ட்விஸ்ட்!  

 


இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களை பயன்படுத்திக் கொள்ள ஏற்கனவே  எக்கோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.  அந்நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை பயன்படுத்தி வருவதாக கூறி இளையராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த விசாரணையில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களை தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இசைஞானியின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது  என 2019ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   இதை எதிர்த்து எக்கோ நிறுவனம்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தது. 


இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இந்நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இசையமைப்பாளர்கள் ஊதியம் பெற்று பணிபுரிகின்றனர். இதனையடுத்து இளையராஜாவுக்கு  ராயல்டி தவிர அனைத்து உரிமையையும் இழந்துவிட்டதாக வாதிட்டார். மேலும், பதிப்புரிமை குறித்து இளையராஜா ஆரம்பகாலகட்டத்தில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை.   இதனால் இளையராஜா பாடல்கள் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது என வாதிட்டார். இதை தொடர்ந்து, தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளர் எனவும் இளையராஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து,  இந்த வழக்கின் விசாரணை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!