undefined

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள்... ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்!

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளின் காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கொல்லம், மன்னார்குடி, தேஜஸ், குருவாயூர், திருச்செந்தூர் ஆகிய ஐந்து விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் அல்லது தாம்பரத்தில் வந்து சேரும்.

பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை பிடிக்க வசதியாக, சில மின்சார ரயில் சேவைகளின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை இந்த மாற்றங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் காரணமாக பயணிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?