undefined

அரசு மருத்துவமனையில் அவலம்... அடிபட்டவருக்கு தையல் போட்ட சமையல் ஊழியர்!

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவருக்குச் சமையல் ஊழியர் தையல் போட்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆலங்குடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு வாகன விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து அந்த நேரத்தில் பணியில் மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ யாரும் மருத்துவமனையில் இல்லாத நிலையில், மருத்துவமனையில் சமையல் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர், காயமடைந்த நபரின் தலையில் தையல் போட்டுள்ளார். தையல் போடுவது மருத்துவம் படிக்காத சமையல் ஊழியர் என்பதை அறிந்த உறவினர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள், "மக்களின் உயிரோடு அரசு விளையாடுகிறதா?" எனக் கேட்டு மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக இருந்து வரும் சில அடிப்படைப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஆலங்குடி தாலுகா மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை என்பது பொதுமக்களின் நீண்டகாலப் புகாராக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், முறையான மருத்துவ உதவியின்றி அவதிப்படும் சூழல் நிலவுகிறது. தாலுகா மருத்துவமனையாக இருந்தும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்களைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதையே பணியாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக மருத்துவத் துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தையல் போட்ட சமையல் ஊழியர் மற்றும் அந்த நேரத்தில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் குறித்துப் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக மருத்துவத் துறை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!