undefined

சுதந்திர தின கொண்டாட்டம்... நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 

நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற உள்ள நிலையில், நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரை  போக்குவரத்து மாற்றங்களை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாளை காலை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான ராஜாஜி சாலை, மற்றும் கொடிமரச் சாலையில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.

இதனால் காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ்  சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம். அதேபோல், அண்ணா சாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கி வரும் வாகனங்கள்  அதே பாதையை பயன்படுத்தலாம்.

ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிஸ் கார்னர், என்.எஃப்.எஸ் சாலை, இராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கி சென்று காமராஜர் சாலையை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில்  சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள், காலை 8.30 மணிக்கு முன் சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்களுடன் வரும் வாகனங்கள், ராஜாஜி சாலையில் சென்று தலைமைச் செயலக நுழைவாயிலின் முன் விருந்தினர் இறங்கியதும் வாகனங்கள்  தலைமைச் செயலகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?