தங்க மங்கை... காமன்வெல்த் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மீரா பாய் தங்கம் வென்று சாதனை!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காமன்வெல்த் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் மீரா பாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். 48 கிலோ பிரிவில் தங்கம் வெல்லும் பயணத்தில் மீராபாய் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 193 கிலோ எடையைத் தூக்கி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 4 ம் இடம் பிடித்த பிறகு, இது அவரது முதல் பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது. மேலும் மீராபாய் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு நேரடி தகுதியையும் பெற்றார். கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிறகு பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஓய்வு எடுத்தார். இப்போது ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார்.
2018 மற்றும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற மீராபாய், பழைய பிரிவுக்குத் திரும்பிய பிறகு ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டார். 2017 உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் மீராபாய் தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோவில் நடந்த 49 கிலோ பிரிவில் மணிப்பூர் வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!