நவம்பர் 14ம் தேதி இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தொடக்கம்.!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் திடலில் தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
தென்னாப்பிரிக்க அணி இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதில் டெஸ்ட் தொடர் முதலிலேயே நடைபெறுகிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரும் கொல்கத்தாவுக்கு வந்தடைந்துள்ளனர். காயம் காரணமாக சில மாதங்களாக அணிக்கு வெளியில் இருந்த கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இரு அணிகளும் நாளை (நவம்பர் 11) முதல் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடர் அட்டவணை:
🏏 முதல் டெஸ்ட்: நவம்பர் 14–18 – கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்)
🏏 இரண்டாம் டெஸ்ட்: நவம்பர் 22–26 – குவாஹாட்டி
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க