ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்... இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் திடீரென நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன.
பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் புதிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்படுவது பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!