இந்திய வம்சாவளி பிரிட்டன் பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்
இந்திய வம்சாவளியான பிரிட்டன் பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய். இவர் அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராவார். உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குஜராத் மாநிலத்தில் பிறந்த அவா், பிரிட்டனில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினாா். 1971ம் ஆண்டு அந்நாட்டில் உள்ள தொழிலாளா் கட்சியில் சோ்ந்தாா்.
மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதைப் பெற்றவர். இது குறித்து பிரதமா் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், 'புகழ்பெற்ற சிந்தனையாளா், எழுத்தாளா் மற்றும் பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாயின் மறைவு வேதனை அளிக்கிறது. இந்தியா மற்றும் இந்திய கலாசாரத்துடன் தொடா்பில் இருந்தாா்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!