undefined

இந்தியாவின் பழைய ரூ.10,000 நோட்டு ஏலத்துக்கு வருகிறது... எவ்வளவு தொகை? பங்கு பெறுவது எப்படி?!

 

நம் நாட்டின் பழைய 10 ஆயிரம் ரூபாய் நோட்டை ஏலத்திற்கு விடுவதற்கு ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள நிலையில், ஆகஸ்டு 31ம் தேதி ஏலம் முடிவடையும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்து உள்ளது. இதனுடன் ஜனாதிபதிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் அவருக்கு முன்பு இருந்த ஜனாதிபதிகளால் பரிசாக பெறப்பட்ட 250க்கும் மேற்பட்ட பொருட்கள், ஜனாதிபதி அலுவலகத்தால் ஏலம் விடப்படுகிறது. அவற்றில் தேசிய சின்ன நினைவு பரிசு, ஒற்றுமை சிலையின் மாதிரி, தாய் மூர்த்தி கருவிப்பெட்டி, பழமையான கடிகாரம், ரூ.10,000 ரூபாய்த்தாள் மாதிரி உள்ளிட்ட அரிய பொக்கிஷ பொருட்கள் அடங்கி உள்ளன.

இதற்கான மின்னணு ஏலம் தற்போது நடைபெற்று வருவதாகவும், இது ஆகஸ்டு 31ம் தேதி முடிவடையும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?