undefined

தீவிரமடையும் காற்றழுத்தம்.. தமிழகத்தில் 29ம் தேதி வரை மழை தொடரும்!

 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை 29ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. ஹாங்காங் பகுதியில் இருந்து செயலிழந்த நிலையில் மியான்மர் வழியாக வரும் வைப்பா புயலின் ஒரு பகுதி வங்கக் கடலில் இறங்கியுள்ளது. இது வங்கக் கடலில் ஏற்கெனவே நிலை கொண்டுள்ள காற்றழுத்தத்துடன் இன்று இணையும் என்றும் வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கு திசையில் இருந்து தென்மேற்கு பருவக் காற்று வங்கக் கடல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. அதனால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது.
 

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்து ெகாண்டு இருக்கிறது. வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடையும் போது, சுழலத் தொடங்கும். அதன் காரணமாக தெற்குக் காற்று தமிழகத்தில் நுழையும். தமிழக வட கடலோர உள் மாவட்டங்களிலும் மழை, வட மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

டெல்டாவிலும் மழை பெய்யத் தொடங்கும். கடும் மேகமூட்டம் காணப்படும். இன்றும் நாளையும் இதே நிலை நீடிக்கும். தூறல் மட்டும் இருக்கும். கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இன்று ஜூலை 25ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக காற்றை திசை மாற்றி அடிக்கும். அதனால் தெற்கு காற்று தமிழகத்தில் நுழைந்து, இன்றிலிருந்து மழை பெய்யும். மாலை இரவில் நல்ல மழை பெய்யும்.

இது ஜூலை 29ம் தேதி வரையில் பெய்யும். அதற்கு பிறகு இப்போதுள்ள தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தீவிரம் அடையும். மாத இறுதியில் குறையும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று பாகிஸ்தானுக்கு சென்றுவிடும். பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மாலை, இரவில் இடி மழை பெய்யும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?