ஆப்கானிஸ்தானில் இணைய சேவை துண்டிப்பு.. தாலிபான்கள் அடுத்த அதிரடி... பொதுமக்கள் அதிர்ச்சி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அரசு பல கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் ஆப்கனில் , ஒழுக்கக்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவையை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்களின் வீடுகளில் வைஃபை இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் 16ம் தேதி வடக்கு பால்க் மாகாணத்தில் சேவை நிறுத்தப்பட்டது.
அதன்பின், பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர், தகார் மாகாணங்களிலும் இணைய சேவைகள் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து ஆன்லைன் மூலம் செயல்பட்டு வரும் வணிகம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் பொருளாதார இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தற்போது தொலைபேசி நெட்வொர்க்குகள் வழியாக மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடிகிறது. ஆனால் அதுவும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!