undefined

ஐபிஎல் 2025 மினி ஏலம்  ... அணிகளுக்குள் வீரர் பரிமாற்றம்... முழு பட்டியல் ! 

 

அபுதாபியில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ள 19-வது ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக, அனைத்து அணிகளும் தக்கவைக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் வீரர் பட்டியலை சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் பல அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கிக் கொண்டு உள்ளன.

இந்த வர்த்தகப் பரிமாற்றத்தில் இடம்பெற்ற முக்கியமான மாற்றங்கள்  

ராஜஸ்தானின் சஞ்சு சாம்சன், ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல், நீண்டநாள் சென்னை வீரராக விளங்கிய ரवீந்திர ஜடேஜா, ரூ.14 கோடிய்க்கு ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனுடன், சென்னையின் சாம் கரனும் ரூ.2.4 கோடிக்கு ராஜஸ்தானில் சேர்ந்துள்ளார்.

லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் ரூ.2 கோடிக்கு மும்பைக்கு சென்றுள்ளார். குஜராத்தின் ரூதர்போர்டை ரூ.2.6 கோடிக்கு மும்பை கைப்பற்றியுள்ளது. ஐதராபாத் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மொஹம்மது ஷமி, ரூ.10 கோடிக்கு லக்னோவில் இணைந்துள்ளார். கொல்கத்தாவின் மயங்க் மார்கண்டே ரூ.30 லட்சத்துக்கு மும்பை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் அர்ஜுன் தெண்டுல்கர், ரூ.30 லட்சத்தில் லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனுடன், ராஜஸ்தானின் நிதிஷ் ராணா ரூ.4.2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும், டெல்லியின் டெனவன் பெரேரா ரூ.1 கோடிக்கு ராஜஸ்தானிலும் இணைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!