ஆவணி ஞாயிறு இத்தனை விசேஷமா?!... இதை செய்ய மறக்காதீங்க!

 

இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை. பொதுவாகவே ஞாயிறு சூரிய வழிபாடு சிறந்தது. அதிலும் ஆவணி  மாத ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரிய வழிபாட்டை தவறவே விடாதீங்க. ஆடி மாதம் முழுக்கவே அம்மன் மாதமாக கொண்டாடப்படுவதைப் போலவே ஆவணி மாதம் சூரியனுக்கானது.

எந்தவொரு காரிய வெற்றிக்கும் முதன்முதலில், முதற்கடவுளான பிள்ளையாரைக் கும்பிட்ட பிறகு தானே துவங்குகிறோம். அந்த விநாயகர் அவதரித்த மாதம் ஆவணி மாதம் தான். கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததும் ஆவணி மாதத்தில் தான்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை!
எப்படி ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் விசேஷமானவையோ அதே போன் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.00 – 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும்.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள். தேக நலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள், அந்த பயிற்சிகளை ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.

விநாயகர் சதுர்த்தி :
விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானதும், முக்கியமானதுமானது சதுர்த்தி. ஆவணி மாதத்தின் சதுர்த்தி தினத்தில் தான் விநாயகர் அவதரித்தார். அதனால் தான் ஒவ்வொரு சதுர்த்தியையும் கொண்டாடுகிறோம். விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.

ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?