அதிர்ச்சி... காசா மீது இஸ்ரேல் குண்டு வீச்சு.. 6 குழந்தைகள் உட்பட 9பேர் பலி!
காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபா நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் 6 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, மத்திய கிழக்கு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ரஃபாவின் புறநகர் பகுதியான டெல் சுல்தான் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டதாக காசா மக்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய வான்குண்டு தாக்குதலில் உயிரிழந்த 6 குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் ரஃபாவின் அபு யூசுப் அல்-நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு கதறி அழுதனர். மற்றவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தினர். தாங்கள் அனைவரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் போராளிகள் அல்ல என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினர். காஸாவின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து எகிப்தின் எல்லையில் உள்ள ரஃபா நகரில் வசித்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!