அடங்காத இஸ்ரேல்.. காசா மீது பயங்கர தாக்குதல்.. 42 பேர் பரிதாப பலி!
காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக்கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்டது.
மேலும், காசா பகுதியில் உள்ள நஸ்ரத் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த 1 பிணைக் கைதியை இஸ்ரேல் சமீபத்தில் மீட்டது.எனினும், 116 பேரை இன்னும் ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களில் சிலர் இறந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில், ஹமாஸ் ஆயுதக் குழு உட்பட 37 ஆயிரத்து 5000 க்கும் மேற்பட்டோர் காஸாவில் கொல்லப்பட்டனர்.
இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காசா பகுதியின் ரபாவில் உள்ள ஷாதி அகதிகள் முகாம் மற்றும் தாபா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் படைகள் இன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில, ஷாதி முகாமில் 24 பேரும், தாபா நகரில் 18 பேரும் மொத்தம் 42 பேரும் உயிரிழந்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!