undefined

மைனர் பெண்களிடம்  விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் தவறு தான்... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 

 சென்னையில் வசித்து வரும்  சதீஷ்குமார் (25) என்பவர்  2014 ல்  15 வயது சிறுமி ஒருவரை  விருப்பமின்றி கடத்தி சென்று  திருத்தணி கோவிலில்  திருமணம் செய்தார் . அதன் பிறகு ஒகேனக்கலில் சில காலம் தங்கியிருந்தனர்.  சிறுமியை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சென்னை திரும்பிய சிறுமி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  சதீஷ்குமாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் சிறுமியைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


இது குறித்து நடைபெற்ற விசாரணையில்  சென்னை போக்சோ நீதிமன்றம் 2018ம் ஆண்டு சதீஷ்குமாருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சதீஷ்குமார்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் அவர் உடலுறவு வைத்ததாக தெரிவித்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறினார்.


இது குறித்து  நீதிபதி சிறுமி மைனர் என்பதால் அவருடைய விருப்பத்தின் பெயரில் மனுதாரர் உடலுறவு வைத்திருந்தாலும் தவறு தான் . அவருக்கு தற்போது  வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்துவிட்டது.  அந்த சிறுமியிடம் அவர் நடந்து கொண்டது எப்போது மனதளவில்   பாதிப்புக்களை ஏற்படுத்தும்.  சிறுமியுடன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளை அறியாமல் இருக்க முடியாது. எனவே அவருடைய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவர்    10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்  என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!