கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான்... டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி.. பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி ஏற்பட்ட கார் வெடிப்பில் பலர் பலியான நிலையில் அந்த தாக்குதலை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் உமர் தான் நடத்தியது என டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே மெதுவாக சென்ற ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறியது. தீவிர வெடிப்பால் அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. காட்சியளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் அந்த கார் சமீபத்தில் டாக்டர் உமர் நபி என்பவரால் வாங்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அவர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெடிப்பு இடத்தில் சிதறி கிடந்த உடல் பாகங்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உமரின் குடும்பத்தாரின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன. இரண்டும் ஒத்துப்போனதாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாக்குதலை உமர் தான் நிகழ்த்தியதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதனிடையே, தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பு தொடர்பு கொண்டிருக்கலாம் என தேசிய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் உமர், கடந்த சில மாதங்களாக டெல்லி, இலாகாபாத், காஷ்மீர் ஆகிய இடங்களில் அடிக்கடி பயணம் செய்ததாகவும் அவரது டிஜிட்டல் சாதனங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நாட்டின் முக்கிய நகரங்களில் உயர் விழிப்புநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க