பெரும் சோகம்... கல் தூண் சரிந்து 4 வயது சிறுமி பலி!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முக சுந்தரபுரம் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் 32 வயது கோபால் . இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுடைய மகள் 4 வயது அஜிதா. கணவன்-மனைவி இருவருமே கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தனது மகளை அருகில் உள்ள அண்ணன் வீட்டில் விட்டு விட்டு கோபால் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். அங்கு 2 கல் தூண்களுக்கு இடையில் துணி காய வைக்கும் கயிறு கட்டி இருந்தது. சிறுமி அதன் அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு பக்க கல் தூண் இடிந்து சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமியின் தலை மற்றும் காதில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. அலறித் துடித்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!