அட கொடுமையே... ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கண்டுபிடிப்பு... ரயில்வே அமைச்சர் தகவல்!
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் மாறுதலில் ஏற்பட்ட கோளாறு தான் விபத்துக்கான காரணம் என்று தெரிய வந்துள்ளதாகவும், இதற்கு காரணமானவர்களைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்று ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களில் 735 பேர் வீடு திரும்பி உள்ளனர். விபத்து நடந்த பகுதிகளில் இருந்த உருக்குலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடத்த இடத்தில் புதன்கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் இந்தியா முழுவதும் செல்ல உள்ள 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 45 மாற்று ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை வரட்டும் ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!