ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்... முதல்வர் இரங்கல்!
ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் உடல்நலக் குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 62. இவர் முதல்வர் ஹேமந்த சோரனுக்கு மிக நெருக்கமானவர்.
கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 2ம் தேதி ஜாம்ஷெட்பூரில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பல நாட்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த ராம்தாஸ் சோரன் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராம்தாஸ் சோரனின் மறைவுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எங்களை விட்டுவிட்டு போய் இருக்கக்கூடாது என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரின் பங்களிப்பு மாநில அரசில் என்றுமே நினைவில் நிற்கும் என தீபிகா பாண்டே சிங் தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!