undefined

இன்று  ஜேபி நட்டா  தமிழகத்தில் ரோடு ஷோ... தொண்டர்கள் உற்சாகம்!

 

 தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய இருக்கிறது .இந்நிலையில்  அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அந்த வகையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சை ஆதரித்து பிஜேபி  தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று  ஏப்ரல் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை பரமக்குடியில் வாகன பேரணி செல்கிறார்.  

இதற்காக ஹெலிகாப்டர் மூலம் பரமக்குடி வரும் ஜே.பி.நட்டா, சரஸ்வதி நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.  அங்கிருந்து வாகன பேரணியாக காந்தி சிலையை வந்தடைகிறார்.  காந்தி சிலை அருகே திறந்த வேனில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பேசுகிறார். ஜே.பி.நட்டா வருகையை முன்னிட்டு  பரமக்குடியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!