ரஜினியின் 173வது படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி - தயாரிப்பு கமல்ஹாசன்!
தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பெரும் திட்டத்தை தயாரிக்க கமல்ஹாசன் முன்வருவது திரையுலகில் பெரிய பேச்சாயுள்ளது. இரு லெஜண்டுகள் ஒரே திட்டத்தில் கைகோர்ப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்ப அமைப்பு, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதால், படத்தில் ஆக்ஷன்–எமோஷன் கலந்து விருந்தளிக்கும் படைப்பு உருவாகும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்தப் படம் 2027-ம் ஆண்டின் பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க