கமல்ஹாசன் நாளை மாநிலங்களவை எம்.பி. ஆக பதவியேற்பு..!
தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள், நாளை ஜூலை 25ம் தேதி வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளனர். இதில் திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக, நாளை பதவியேற்க உள்ளனர். குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
கமல்ஹாசன், திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த புதிய பயணத்தை தனது நீண்டகால நண்பரான நடிகர் ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொண்டதாகவும், அவரை சந்தித்து பேசியதாகவும் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லி பயணத்திற்கு முன் விமானநிலையத்தில் கமல்ஹாசன், ‘இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை, பெருமையோடு செல்கிறேன். நாடாளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது, உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்கவுள்ளேன். இந்த பயணம் தனது அரசியல் பயணத்தில் முக்கியமானதாக இருக்கும் ” எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!