இசைஞானியுடன் பாடும் கமல்... வைரலாகும் வீடியோ!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்வு துவங்கியதும் இளையராஜா இருக்கையில் அமர்ந்தபடி, ’அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே..’ பாடலைப் பாடினார்.
அப்பொழுது உடன் அமர்ந்திருந்த நடிகர் கமல் ஹாசனும் அவருடன் சேர்ந்து ஒலிவாங்கியில் பாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!