undefined

கோர விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

 

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தொடர் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500 பேரின் கதி என்ன? தெரியவில்லை என்றாலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வினா ஜார்ஜ் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் வினா ஜார்ஜ் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பைக்கில் வந்த நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!