கிம், புதின் உட்பட 26 வெளிநாட்டு தலைவர்கள் சீனாவுக்கு பயணம்!  

 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 3ம் தேதி  வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்தப் பேரணியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொள்ள  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/e2BdpP3JtEw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/e2BdpP3JtEw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="Putin, Kim Jong-Un, Xi Jinping Show Of Defiance In Beijing; China's Triple Shock For Trump, West" width="853">

சீன தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 3ம் தேதி இந்த வெற்றி தினப் பேரணி கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணி அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் போது சீனாவின் நவீன ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், அதிநவீன ஆயுதங்களின் அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது. 

இந்த விழாவில் 26 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோரும்  கலந்து கொள்வார்கள் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் நடைபெறும் அணிவகுப்பை மேற்குலக நாடுகளும், சர்வதேச நோக்கர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே, சீனாவில் 26 நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக கூடுவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?