undefined

 ரத்தன் டாடாவுக்கு விருது வழங்க இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அழைப்பு... கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்த ரத்தன் டாடா | நெகிழ்ச்சி காரணம்!

 
 பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிகப்பெரிய கௌரவத்தை தனது செல்ல நாய்க்குட்டிக்காக உதறித் தள்ளினார் ரத்தன் டாடா. கடந்த 2018ல் தற்போதைய பிரிட்டிஷ் மன்னரும் அப்போதைய வேல்ஸ் இளவசரருமான சார்லஸ், ரத்தன் டாடாவின் சேவைகளைப் பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை நடத்திய இந்த விருது வழங்கும் விழா, கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற இருந்தது. இது குறித்து தகவல் ரத்தன் டாடாவுக்கு தெரிவிக்கப்பட்டு, இந்த விழாவில் கலந்துகொண்டு கௌரவம் மிக்க விருதைப் பெற ரத்தன் டாடாவும் ஒப்புக் கொண்டிருந்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் லண்டன் செல்ல வேண்டிய பயண நாள் நெருங்குகையில், ரத்தன் டாடா திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டு லண்டன் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்து விட்டார். தனது பயணத்தையும் ரத்து செய்து விட்டார்.

அவரது வளர்ப்பு நாய் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்ததால், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஒருங்கிணைத்த விருது விழாவை ரத்து செய்துவிட்டு, தனது நேரத்தை, வளர்ப்பு நாயைக் கவனிப்பதில் செலவு செய்ய முடிவு செய்திருந்தார் ரத்தன் டாடா. 

டாடாவுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்தும் பல தொழிலதிபர்கள் லண்டனில் குழுமியிருந்தனர். அப்படி லண்டன் சென்றவர்களில் இந்திய தொழிலதிபரான சுஹேல் சேத்தும் ஒருவர். பிப்ரவரி 6ம் தேதி நடைபெறும் விழாவிற்காக பிப்ரவரி 2ம் தேதிய லண்டனில் இருந்தார் சுஹேல் சேத். 

சுஹேல் சேத்தைத் தொடர்ப்பு கொண்ட ரத்தன் டாடா, தனது நாய்க்கு உடம்பு முடியவில்லை என்றும் தான் அதைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் தன்னால் லண்டனுக்கு வந்து விருதை வாங்கிக் கொள்ள இயலாது என்றும் தனது நிலையை விளக்கி கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு, தன்னால் வர இயலாததையும் முறைப்படி தெரியப்படுத்தியும் தகவல் அனுப்பியிருந்தார் ரத்தன் டாடா. நிகழ்வில் ரத்தன் டாடா கலந்துக் கொள்ளாமல் போனதற்கான உண்மையான காரணம் மன்னர் சார்லஸு க்கு தெரியவர, அவர் ரத்தன் டாடா குறித்து பெருமையாக பேசியதாக தொழிலதிபர் சுஹேல் சேத் பகிர்ந்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!